மியூசா பரம்ஜிடியானா எனும் தாவரவியல் பெயருடைய புதிய காட்டு இன வாழையை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வட அந்தமானின் கிருஷ்ணபுரி வனத்தில் இக்காட்டு வாழை இனம் கண்டறியப்பட்டுள்ளது.
உண்ணத்தக்க, இனிப்புடன் புளிப்பு சுவையுடைய, புடைத்த வடிவமுடைய பல விதைகளைக் கொண்ட, படகு போன்ற வடிவமுடைய வாழைப் பழங்களை காய்க்கும் இக்காட்டு இன வாழையானது 9 மீட்டர் வரை வளரக் கூடியது.
சர்வதேச பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN-International Union For Conservation Of nature) சிவப்பு பட்டியலின் (Red List) கீழ் இக்காட்டு இன வாழையானது மிகவும் அழியும் தருவாயில் உள்ள தாவர இனமாக (Critically Endangered) பட்டியலிடப்பட்டுள்ளது.
இது வரை அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இரு இடங்களில் மட்டுமே இவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்திய தாவரவியல் கணக்காய்வு நிறுவனத்தின் (Botanical Survey Of India) தற்போதைய இயக்குநரான பரம்ஜித் சிங்-ஐ கவுரவிக்கும் விதத்தில் இப்புது காட்டு இன வாழைக்கு “மியூஸா பரம்ஜிடியானா ” என பெயரிடப்பட்டுள்ளது.