நாசாவின் “வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கைக் கோளானது” (TESS -Transiting Exoplanet Survey Satellite) HD21749 எனும் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் HD21749b எனும் பெயரிடப்பட்ட புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.
இந்த கோளானது பூமியிலிருந்து 53 ஒளியாண்டு தொலைவில் உள்ள மங்கலான ரெடிகுலம் எனும் நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்துள்ளது.
HD21749b ஆனது நமது சூரியனைப் போல் ஒளி வீசும் சூடான நட்சத்திரமான அதன் மைய நட்சத்திரத்தினை 36 புவி நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகின்றது.
இது பூமியை விட மூன்று மடங்கு பெரியதும் 23 மடங்கு அதிக நிறையையும் உடையதாகும். அதாவது திண்மமாக அல்லாமல் வாயுக் கோளாக இருக்கும் இது ஒரு துணை நெப்டியூன் கோளாகும்.