TNPSC Thervupettagam
March 31 , 2018 2430 days 787 0
  • கெப்ளர் 2 தொலைநோக்கியினைப்  (Kepler 2 telescope) பயன்படுத்தி பூமியிலிருந்து 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஓர் குட்டையான நட்சத்திரத்தைச் சுற்றிவருகின்ற, சூடான, உலோக, பூமி அளவிலான K2-229b எனும் புதிய கோளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • தொலைதூரத்தில் உள்ள அந்தக் கோளினை கண்டுபிடிப்பதற்காகவும் அதன் பண்பியல்புகளை வகைப்படுத்துவதற்காகவும் ”Wobble” முறை என்றழைக்கப்படும் டாப்ளர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழிற்நுட்பத்தை (Doppler spectroscopy technique ) ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • இக்கோள் பூமியை விட 20 சதவீதம் பெரியதானதாகும். மேலும் பூமியின் நிறையைக் காட்டிலும் இரண்டரை மடங்கு நிறை  அதிகம் கொண்டுள்ளது. இக்கோளானது 2000 டிகிரி செல்சியஸ் வரை  பகல் பொழுது வெப்பநிலையை அடைகின்றது.
  • K2-229b கோளானது ஒவ்வொரு 14 மணி நேரத்திற்கும் தன் குறு நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது. புதன் போன்ற கோள்களை ஒத்த உயர் அடர்த்தியை இக்கோள் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்