தமிழ்நாடு வனத்துறையானது, கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில் 25 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 37,500 சதுப்புநிலத் தாவரங்களை பயிரிட்டுள்ளது.
இது பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதன்முறையாக, தற்போதுள்ள சதுப்புநிலப் பகுதிக்குப் பதிலாக, வேறொரு இடமானது சதுப்புநிலத் தோட்டம் அமைப்பதற்கு சாதகமானதாக இது அடையாளம் காணப் பட்டுள்ளது.
கடலோர வாழ்விடங்களின் மறுவாழ்வுத் திட்டம் ஆனது 2023-24 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.