TNPSC Thervupettagam
August 30 , 2024 85 days 110 0
  • கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிக உணர்திறன் மற்றும் தெரிவு நிலை சயனைடு உணர்வி ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஒரு புதிய இரசாயன உணர்வு நுட்பத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தக் குழுவானது குறைந்தச் செறிவில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த சயனைடைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு பொருளை உருவாக்கியுள்ளது.
  • இது குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்தும்.
  • ஒரு சக்தி வாய்ந்த நச்சுப் பொருளான சயனைடு பல்வேறு தாவரங்கள், பழங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில் காணப்படுகிறது.
  • மனிதர்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் மீது கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் லிட்டருக்கு 0.19 மில்லி கிராமிற்கும் குறைவான செறிவு வரம்பினை உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது.
  • மரவள்ளிக்கிழங்கு போன்ற சில உணவுகள் மற்றும் ஆப்பிள் மற்றும் பாதாமி விதைகள், முளைத்த உருளைக்கிழங்கு மற்றும் பாதாம் போன்ற பல்வேறு பொதுவான பொருட்களை உட்கொள்வதன் மூலம் சயனைடு நச்சு உடலில் புகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்