புதிய சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் ஆனது 2022 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
பன்னீர், அரிசி, கோதுமை, வெல்லம், தயிர் மற்றும் லஸ்ஸி போன்ற முன்பே பொதியிடப் பட்டு நிறுவனப் பெயர் முத்திரையிடப்பட்டத் தயாரிப்புகள் உட்பட பல உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளன.
இந்த அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி முதல் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியானது விதிக்கப்படுகிறது.
உலர்ந்த மக்கானா, பொறி, மெஸ்லின் மாவு, முத்திரையிடப்பட்ட இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றுக்கும் 5 சதவீத அளவில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும்.
இந்தப் பொருட்கள் அனைத்திற்கும் முன்பு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இது தவிர, மாம்பழக் கூழ் உட்பட அனைத்து வகையான மாம்பழங்களுக்கும் இப்போது 12% அளவில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.
இருப்பினும், எடை அளவில் வழங்கப்படும் பொருட்கள், முத்திரையிடப்படாத மற்றும் பெயரிடப் படாதப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும்.
உணவகங்கள் மற்றும் வங்கிச் சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட வங்கிச் சேவைகளுக்கான புதிய சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் தற்போது 18% ஆக இருக்கும்.
தங்கும் விடுதி அறைகளுக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் விதிக்கப் படும்.
முன்னர் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து இவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டது.