TNPSC Thervupettagam

புதிய சாலமண்டர் இனங்கள்

August 23 , 2023 332 days 199 0
  • மணிப்பூரின் மலை ஏரிகளில் சாலமண்டரின் புதிய ‘ஒத்த’ இனத்தினை இந்திய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய இனங்கள் டைலோடோட்ரிடான் சைமெங் எனப்படுகின்றன.
  • இந்த இனமானது இதுவரை அதனுடன் தொடர்புடைய மற்ற இனங்களான டைலோடோட்ரிடான் ஹிமாலயனஸ் மற்றும் டைலோடோட்ரிடான் வெருகோசஸ் என்று தவறாகக் கருதப் பட்டது.
  • மணிப்பூரில் உள்ள கோங்தெங் மலைத்தொடரின் மேலே, கடல் மட்டத்திலிருந்து 2,215 மீ உயரத்தில் அமைந்துள்ள சைமெங் என்ற மலை ஏரியின் பெயரில் இந்தப் புதிய இனத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
  • சைமெங் என்பது "புதிர்மிக்க ஏரி" அல்லது "மர்ம ஏரி" என்று பொருள்படும் லியாங்மெய் வட்டாரச் சொல்லாகும் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்