TNPSC Thervupettagam

புதிய சிலந்தி மற்றும் மரவட்டை இனங்கள் – கேரளா

February 9 , 2022 894 days 450 0
  • இரிஞ்சல்குடம் என்னுமிடத்திலுள்ள கிறித்துவர் கல்லூரியின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், தெஹ்னிப்பாலத்திலுள்ள கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஒரு புதிய மரவட்டை இனத்தினையும் வயநாடு வனவிலங்குச் சரணாலயத்தில் ஒரு புதிய சிலந்தி இனத்தினையும் கண்டறிந்துள்ளனர்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள வனவிலங்குச் சரணாலயத்தின் தோல்பெட்டி வனப் பிரிவின் ஈர இலையுதிர் காடுகளில் இருந்து கண்டறியப்பட்ட புதிய சிலந்தி இனத்தின் பெயர் கார்ஹோட்டஸ் தோல்பெட்டியென்சிஸ் (Carrhotus tholpettyensis) என்பதாகும்.
  • ஆராய்ச்சியாளர்கள் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒரு புதிய மர வட்டை இனத்தினையும் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய இனத்திற்கு டெலார்த்ரம் அனோமலான்ஸ் (Delarthrum anomalans) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இது பாராடோக்சோமட்டிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்