TNPSC Thervupettagam

புதிய சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள்

November 1 , 2024 29 days 114 0
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள நாம்தாபா தேசியப் பூங்கா & புலிகள் வளங் காப்பகம் மற்றும் கம்லாங் வனவிலங்குச் சரணாலயம் & புலிகள் வளங்காப்பகம் ஆகியவை சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களாக (ESZ) நியமிக்கப்பட்டுள்ளன.
  • முதலில் காப்புக்காடாக நியமிக்கப்பட்ட நாம்தாபா புலிகள் வளங்காப்பகம் ஆனது, 1972 ஆம் ஆண்டில் வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • இது 1983 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாகவும் பின்னர் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ் புலிகள் வளங்காப்பகமாகவும் மாற்றப்பட்டது.
  • கம்லாங் நதியானது கம்லாங் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக பாய்கிறது.
  • ஹூலாக் கிப்பன் மற்றும் இருவாச்சி (ஹார்ன்பில்ஸ்) போன்ற சில உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இந்தச் சரணாலயம் முக்கியமானதாகும்.
  • 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பாக்கே புலிகள் வளங்காப்பகம் அதே ESZ பிரிவில் சேர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்