அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள நாம்தாபா தேசியப் பூங்கா & புலிகள் வளங் காப்பகம் மற்றும் கம்லாங் வனவிலங்குச் சரணாலயம் & புலிகள் வளங்காப்பகம் ஆகியவை சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களாக (ESZ) நியமிக்கப்பட்டுள்ளன.
முதலில் காப்புக்காடாக நியமிக்கப்பட்ட நாம்தாபா புலிகள் வளங்காப்பகம் ஆனது, 1972 ஆம் ஆண்டில் வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இது 1983 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாகவும் பின்னர் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ் புலிகள் வளங்காப்பகமாகவும் மாற்றப்பட்டது.
கம்லாங் நதியானது கம்லாங் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக பாய்கிறது.
ஹூலாக் கிப்பன் மற்றும் இருவாச்சி (ஹார்ன்பில்ஸ்) போன்ற சில உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இந்தச் சரணாலயம் முக்கியமானதாகும்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பாக்கே புலிகள் வளங்காப்பகம் அதே ESZ பிரிவில் சேர்க்கப் பட்டது.