சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள புதிய சுற்றுச்சூழல் சார் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் (30 கோடி ரூபாய்), கன்னியாகுமரி (20 கோடி ரூபாய்), திருச்செந்தூர் (30 கோடி ரூபாய்), நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் (20 கோடி ரூபாய்) உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய மத சுற்றுலாத் தலங்களை நவீனமயமாக்குவதற்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் முறையே தமிழ்நாட்டின் பௌத்த மற்றும் சமண மரபுகளை வெளிப்படுத்தும் கலாச்சாரப் பாரம்பரிய மையங்களையும் மாநில அரசு நிறுவ உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைகள், கோமுகி மற்றும் மணி முத்தாறு அணைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை ஏரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காக மேம்பட்ட உள்கட்டமைப்புடன் மேம்படுத்தப்படும்.