பிரேசிலில் அமனாசரஸ் நெஸ்பிட்டி என்று பெயரிடப்பட்ட சிலேசரரின் புதிய பேரினம் மற்றும் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 233 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பிந்தைய ட்ரயாசிக் என்ற சகாப்தத்தின் கார்னிய யுகத்தின் போது, தற்போது பிரேசிலில் உள்ள பல பகுதிகளில் அமானசரஸ் நெஸ்பிட்டி இனம் காணப்பட்டது.
இந்தப் பழங்கால உயிரினமான ட்ரயாசிக் டைனோசாரிஃபார்ம் ஊர்வனவற்றின் அழிந்து போன சிலேசவுரிடே என்ற குடும்பத்தின் ஒரு உறுப்பு இனமாக இருந்தது.
அவை பொதுவாக டைனோசர் அல்லாத டைனோசரிஃபார்ம்களின் குழுவாகவும், டைனோசர்களின் சகோதரி (இணை) குழுவாகவும் கருதப்படுகிறது.