ஒடிசாவின் மூன்று மாவட்டங்களின் (தியோகர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச்) வெவ்வேறு இடங்களில் தங்கத் தாது இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அடாஸ் பகுதியில் தாமிரத்துடன் சேர்த்து 1,685 கிலோ அளவிற்கு எடை கொண்ட தங்கத் தாதுவினையும் இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்தியாவின் குரோமைட் இருப்பில் 98 சதவீதம் ஒடிசாவில் காணப்படுகிறது.