வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள சத்யகோபால், “வேர் மண்டல நீர்ப்பாசன தண்ணீர் சேமிப்புத் தொழில்நுட்பத்தை” (Water Conserving root zone irrigation technique) கண்டுபிடித்துள்ளார்.
மண்ணின் ஆழமான அடுக்குகளில் தண்ணீர் தேக்கம் மற்றும் ஈரப்பத அளவை அதிகரித்து பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக உள்ள இத்தொழில்நுட்பம் மிகவும் குறைவான செலவுடையது (Cost Effective).
இத்தொழில்நுட்பம் சொட்டு நீர்ப் பாசன வசதியுடன் இணைத்து உபயோகப்படுத்த வல்லது.
பிற வழக்கமான நீர்ப்பாசன முறைகள் மற்றும் மேற்பரப்பு சொட்டுநீர்ப் பாசன முறைகளைப் போல் அல்லாமல், இவை குறைந்த அளவு நீர்த் தேவையை கொண்டு மண்ணின் இரண்டடி ஆழத்திற்கும் நீரை கொண்டு செல்ல வல்லது.
மேற்பரப்பு சொட்டு நீர்ப் பாசன முறைகளில் ஆவியாதல் இழப்புகளும், போதிய அளவில் வேர் மண்டலம் ஈரப்பதம் அடையாத நிலையும் உண்டாவதால் இந்த புதிய தொழில்நுட்பமானது பாசனநீர் மணற்படுகைகள் வழியே மண்ணின் ஆழ அடுக்குகளுக்கு ஊடுருவி வேர் மண்டலத்தில் ஈரப்பத இருப்பை உறுதிசெய்கிறது.