புதிய தமிழ்நாடு பாலியல் துன்புறுத்தல் தடை மசோதா 2025
January 14 , 2025 4 days 34 0
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்களின் பாலியல் துன்புறுத்தல் தடை (திருத்தம்) சட்டத்தினைத் திருத்துவதற்கான மசோதாவினை தமிழ்நாடு சட்டமன்றம் தாக்கல் செய்துள்ளது.
இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்களைத் தொடர்பு கொள்வதைத் தடுக்க "பாதுகாப்பு உத்தரவுகளை" வெளியிட உதவும் வகையில் 7C பிரிவினை இணைக்க இந்த மசோதா முயல்கிறது.
பாரதீய நியாய சன்ஹிதாவின் (BNS) 74-79வது பிரிவு அல்லது 296வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் தண்டனைகளை அதிகரிப்பதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.