இந்திய ரிசர்வ் வங்கியானது புதிய தலைமை நிறுவனங்கள் (New Umbrella Entity - NUE) உரிமத்திற்கான விண்ணப்பங்களை ஆராயவும், அது பற்றிய பரிந்துரைகளை வழங்கவும் வேண்டி ஒரு குழுவினை நியமித்துள்ளது.
இந்த 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு P. வாசுதேவன் தலைமை ஏற்க உள்ளார்.
பெரிய பொருளாதாரத் தாக்கத்திலிருந்துப் பாதுகாப்பு இடர்கள் வரையிலான NUE உரிமத்தின் பல்வேறு அம்சங்களைக் கண்காணிப்பது இக்குழுவின் பொறுப்பாகும்.
குறிப்பு
லாப நிறுவனங்கள் விற்பனைப் பிரிவுகளில் பணவழங்கீட்டினை மேலாண்மை செய்வதற்காக புதிய தலைமை நிறுவனங்கள் நிறுவப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்திற்கு இணையாக ஒரு புதிய தலைமை நிறுவனக் கட்டமைப்பினை உருவாக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.