TNPSC Thervupettagam

புதிய தவளை இனம் – அருணாச்சல பிரதேசம்

December 26 , 2017 2397 days 822 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தல்லே பள்ளத்தாக்கு(Talley Valley) வன உயிர் சரணாலயத்தில் புதிய தவளை இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் தாழ்ந்த நிலப்பாங்குடைய (lower) சுபன் ஸ்ரீ மாவட்டத்தில் இப்புது தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஒடோர்ரனா அருணாசலேன்சிஸ் (odorrana arunachalensis) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • கலப்பு ஈரநிலை வெப்ப மண்டல காடுகளின் மலை நீரோடைகளுடன் பெரணிகளால் சூழப்பட்ட பாறைகளுள்ள பகுதிகளில் இத்தவளைகள் வாழ்கின்றன.
  • இரு கண்களுக்கிடையே இவைகள் கொண்டுள்ள கரும்பட்டை போன்ற அடையாள குறியானது இவற்றை பிற தவளைகளிலிருந்து வேறுபடுத்தும் அம்சமாகும்.
  • கிழக்கு ஆசியா மற்றும் அதனைச் சுற்றிய பிராந்தியங்களில் ஒடோர்ரனா பேரின தவளைகள் வாழ்கின்றன.
  • மேலும் இவற்றின் இனங்களை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஈரநிலை காலங்களில் காணலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்