அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்தாபா-கம்லாங் நிலப்பரப்பின் பல்லுயிர் காப்புப் பகுதியில் மூன்று புதிய-அறிவியல் ரீதியான தவளை வகைகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிரேசிக்சலஸ் பட்கெயன்சிஸ் என்ற முதலாவது இனம் என்பது வெளிப்படையான உடலமைப்பு கொண்ட ஒரு பச்சை நிறத் தவளை ஆகும்.
அல்கலஸ் ஃபோண்டினாலிஸ் எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது தவளை இனம், பேரினத்தின் கடைசி இனமானது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய மற்றும் மூன்றாவது தவளை இனம் ஆனது சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது என்பதோடு மேலும் இதற்கு நோவா-டிஹிங் ஆற்றின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த "ஒலி எழுப்பும் தவளை" இனத்திற்கு நிதிரானா நோடிஹிங் என்று பெயரிடப் பட்டு உள்ளது.
இந்தியாவில் ஐந்து இனங்கள் விவரிக்கப் பட்டதுடன் 1799 ஆம் ஆண்டில் தொடங்கிய இருவாழ்வி இனங்களின் அறிவியல் சார் பதிவுகள், தற்போது சுமார் 470 இருவாழ்வி இனங்களைக் கொண்டுள்ளன.