TNPSC Thervupettagam
January 6 , 2024 324 days 250 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்தாபா-கம்லாங் நிலப்பரப்பின் பல்லுயிர் காப்புப் பகுதியில் மூன்று புதிய-அறிவியல் ரீதியான தவளை வகைகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கிரேசிக்சலஸ்  பட்கெயன்சிஸ் என்ற முதலாவது இனம் என்பது வெளிப்படையான உடலமைப்பு கொண்ட ஒரு பச்சை நிறத் தவளை ஆகும்.
  • அல்கலஸ் ஃபோண்டினாலிஸ் எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது தவளை இனம், பேரினத்தின் கடைசி இனமானது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
  • தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய மற்றும் மூன்றாவது தவளை இனம் ஆனது சதுப்பு நிலங்களில் காணப்படுகிறது என்பதோடு மேலும் இதற்கு நோவா-டிஹிங் ஆற்றின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த "ஒலி எழுப்பும் தவளை" இனத்திற்கு நிதிரானா நோடிஹிங் என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • இந்தியாவில் ஐந்து இனங்கள் விவரிக்கப் பட்டதுடன் 1799 ஆம் ஆண்டில் தொடங்கிய இருவாழ்வி இனங்களின் அறிவியல் சார் பதிவுகள், தற்போது சுமார் 470 இருவாழ்வி இனங்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்