TNPSC Thervupettagam

புதிய தாவர இனம் – மேற்குவங்கம்

February 26 , 2018 2464 days 952 0
  • இந்திய தாவரவியல் கணக்காய்வு நிறுவனத்தைச் (Botanical Survey of India) சேர்ந்த தாவரவியலாளர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்தபாரா தேசியப் பூங்கா (Jaldepara National Park) மற்றும் பக்ஸா தேசியப் பூங்காவில் (Buxa National Park) ஒரு புதிய தாவர இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயர் கொண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தாவர இனத்திற்கு டிரைபேடெஸ் கலாமி (Drypetes kalamii) என தாவரவியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இது ஒரு சிறிய புதர் வகை (Shurb) தாவரமாகும்.
  • மிதவெப்ப ஈர-பகுதி-பசுமை மாறாக் காடுகளின் (subtropical moist semi-evergreen forests) நிழற்பாங்குடைய பகுதிகளிலும், ஈர நிலப்பகுதிகளிலும் இந்த தாவரங்கள் காணப்படுகின்றன.
  • புத்ராஜீவா எனப்படும் மருத்துவ தாவரங்களோடு நெருங்கிய தொடர்புடைய இவை ஓர் ஓர்பால் (Unisexual) தாவர இனமாகும். அதாவது தனித்தனி ஆண், பெண் தாவரங்களை கொண்டவை.
  • வெளிர் மஞ்சள் நிற பூக்களை கொத்து கொத்தாகப் பூக்கும் இத்தாவரம் அடர் ஆரஞ்சு நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரையிலான பழங்களைத் தரவல்லவை.
  • இவை பிரத்தியேகமாக இவ்விரு தேசிய பூங்காக்களில் மட்டுமே காணப்படுகின்றன.
  • சர்வதேச பன்னாட்டு பாதுகாப்பு சங்க விதிமுறைகளின் படி, ஆராய்ச்சியாளர்கள் இத்தாவரத்தை “மிகவும் அச்சுறுத்தல்” (Critically Endangered) நிலையில் உள்ள  தாவர இனமாக மதிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்