இந்திய தேசிய கடல் சார் தகவல் சேவைகள் மையம் (INCOIS) ஆனது அதன் சொந்தத் தேடல் மற்றும் மீட்பு உதவிக் கருவியின் (SARAT) புதிய வடிவத்தினை உருவாக்கி உள்ளது.
இது 'சிறந்த துல்லியத்தன்மை மற்றும் பயன்பாட்டை' வழங்குவதோடு, இந்தியக் கடலோரக் காவல்படை போன்ற இந்திய தேடல் மற்றும் மீட்பு (SAR) நிறுவனங்களுக்கு அவற்றின் கடல் சார் நடவடிக்கைகளில் உதவும்.
இந்த SARAT செயலி ஆனது மனிதர்கள் உட்பட கடலில் தொலைந்து போன பல்வேறு பொருட்களின் சாத்தியமான தேடல் பகுதியை உருவகப்படுத்தக் கூடியது.
2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட SARAT கடலோரக் காவல்படையினால் அதன் கடல் சார் தேடல் நடவடிக்கைகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.