ஸ்கால்லெர்ஸ் மரத்தேள் எனப் பெயர் சூட்டப்பட்ட புதிய தேள் வகையை திரிபுராவில் உள்ள திரிஷனா வன உயிர் சரணாலயத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய இந்தியாவின் புலிகள், இமயமலைப் பகுதிகளிலுள்ள பனிச்சிறுத்தைகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வன உயிர்கள் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜார்ஜ் ஸ்கார்லெரை (George Schaller) கவுரவிக்கும் விதமாக இப்புதிய தேள் இனத்திற்கு லியோசெலெஸ் ஸ்கால்லெரி (Liocheles Schalleri) எனும் விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஸ்கால்லெர்ஸ் மரத் தேளானது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11வது மரத் தேள் இனமாகும்.
பொதுவாக காணப்படும் பெரும் தேள்களை காட்டிலும் சிறியதாக இத்தேள்கள் காணப்படுவதால் இவை குட்டைத் தேள்கள் என்றழைக்கப்படும்.
இந்தியாவில் 125 தேள் இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவிலுள்ள 11 மரத் தேள்களுள் 9 மரத் தேள்கள் இந்திய பிரதேசங்களில் மட்டும் காணப்படும் (endemic) மரத்தேள்களாகும்.
திரிபுராவின் திரிஷனா வன உயிர் சரணாலயம் மற்றும் காட்டெருமைகளின் (bisan) தேசியப் பூங்கா உட்பட குறைந்த உயரமுடைய பகுதிகளில் காணப்படும் இம்மரத்தேள்கள், வங்கதேசத்திலும் காணப்படுகின்றன.