TNPSC Thervupettagam

புதிய தொல்பொருள் தளங்கள்

September 9 , 2021 1080 days 716 0
  • தமிழ்நாடு மாநில அரசு விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துலுக்கார்பட்டி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை ஆகிய மூன்று புதிய இடங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளும்.
  • கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் ஏற்கனவே மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுடன் சேர்த்துக்  கூடுதலாக இது மேற்கொள்ளப்படும்.
  • தாமிரபரணியின் கரையில் உள்ள பகுதிகளிலும் மற்றும் கற்காலத் தளங்களிலும் அறிவியல் தள ஆய்வுகளை 2021-22 காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்ளும்.
  • தொல்லியல் நிறுவனமானது மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியியல் நிறுவனம் எனப் பெயர் மாற்றப்படும்.
  • மதுரை மாவட்டத்தின் முதலைக் குளம் மற்றும் அரிட்டாபட்டி, சிவகங்கை மாவட்டத்தின் பூலாங்குறிச்சி,  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேகனூர்பட்டி மற்றும் தொண்டூர் ஆகிய பழமையான கல்வெட்டுகள் காணப்படும் இடங்களானது பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப் படும்.
  • புகழ்பெற்ற தமிழ் மன்னர் இராஜராஜ சோழன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புத்த விகாரங்களின் வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ‘லைடன் தகடுகளை’ (Leiden plate) நெதர்லாந்தில் இருந்து  மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும்.
  • இந்தியத் தொல்லியல் துறையின் அதிகாரப்பூர்வ வெளியீடான எபிக்ராபியா இண்டிகாவில் இடம் பெற்றுள்ள ‘அன்பில் தகடுகள்’ கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்