TNPSC Thervupettagam

புதிய தொழிற்துறை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தொடர்பான கொள்கைகள்

February 19 , 2021 1434 days 1117 0
  • பிப்ரவரி 16 அன்று தமிழ்நாடு அரசானது ஒரு புதிய தொழிற்துறைக் கொள்கையை அறிவித்துள்ளது.
  • இது பின்வரும் 4 முக்கிய குறிக்கோள்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • 2025 ஆம் ஆண்டிற்குள் 10 இலட்சம் கோடி மதிப்புள்ள (135 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடுகளை ஈர்த்தல்
    • இந்தக் கொள்கை காலத்தில் உற்பத்தித் துறையில் 15% வருடாந்திர வளர்ச்சியை அடைதல்
    • 2030 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை தற்பொழுதுள்ள 25% என்ற அளவிலிருந்து 30% ஆக அதிகரித்தல்.
    • 2025 ஆம் ஆண்டிற்குள் 20 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

MSME கொள்கைகள்

  • மேலும் முதல்வர் அவர்கள் MSME/ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக ஒரு உறுதியான சூழலமைப்பை வழங்குவதற்காக MSME கொள்கையையும் வெளியிட்டுள்ளார்.
  • இது பின்வருவனவற்றை இலக்காக நிர்ணயித்துள்ளது.
    • 2025 ஆம் ஆண்டிற்குள்  ரூ.2 இலட்சம் கோடி அளவில் புதிய முதலீடுகளை ஈர்த்தல்
    • 20 இலட்சம் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  • புதிய MSME மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றிற்குச் சுயச் சான்றளிப்பு அடிப்படையில் 3 ஆண்டு காலத்திற்கு உருவாக்கம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • இந்த அலகுகள் 3 ஆண்டு காலம் முடிவடைந்த 1 ஆண்டிற்குள் கட்டாயமாக ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தப் புதிய கொள்கையானது MSME நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு மானியங்களுக்கான உச்ச வரம்பை அதிகரித்துள்ளது.
  • மேலும் MSME நிறுவனங்களுக்குத் தயார் நிலையில் உள்ள வசதிகள்/இடங்கள், காப்பிடம் மற்றும் மனை ஆகியவை மேம்படுத்தப்பட்டு குறைந்த காலக் குத்தகைக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்