TNPSC Thervupettagam

புதிய நீர் வழிகள்

May 25 , 2020 1554 days 704 0
  • வங்க தேசத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக நெறிமுறையின் இரண்டாவது ஒப்பந்தத்தில் இந்தியாவும் வங்க தேசமும் கையெழுத்திட்டுள்ளன.
  • இது பூடான் சரக்குகள், கற்சில்லுகள் மற்றும் வடகிழக்கு மாநிலத்தின்  சரக்குகளை வங்க தேசத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டி உதவ இருக்கின்றது.
  • இது வங்கதேசம் மற்றும் கீழை அசாமின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய இருக்கின்றது.
  • இந்த 2 நாடுகளும் 4 புதிய வழிகளுடன் திரிபுராவில் கோமதி நதியின் மீது சோனமுரா-தௌத்கண்டி வழி மற்றும் வங்க தேசத்தில் ராஜ்சஹி – துளியன் – ராஜ்சஹி வழி ஆகியவற்றை இந்தியா – வங்கதேச நெறிமுறை வழிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது.
  • மையா, கோலாகாட், சோனமுரா, துளியன் மற்றும் ஜோகிகோபா ஆகியவை இந்தியாவிடம் உள்ள 5 புதிய வழிப் பாதைத் துறைமுகங்களாகும்.
  • வங்க  தேசத்திடம் சுல்தான்கன்ஞ், ராஜ்சாஹி, சில்மாரி, பகதூராபாத் மற்றும் தௌத்கண்டி ஆகிய வழிப் பாதைத் துறைமுகங்கள் உள்ளன.
  • ஜோகிகோபாவின் இணைப்பானது மேகாலயா, பூடான் மற்றும் அசாம் ஆகியவற்றோடுத் தொடர்பை ஏற்படுத்த உதவ இருக்கின்றது.      
  • தற்பொழுது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே வழிப் பாதை துறைமுகங்கள் 6 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன.
  • இந்தியாவிடம் ஹால்தியா, கொல்கத்தா, பாண்டு, கரீம்கஞ்ச், துப்ரி மற்றும் சில்காட் ஆகியவை உள்ளன.
  • வங்க தேசத்திடம், குல்னா, நாராயண்கஞ்ச், சிராஜ்கஞ்ச், மோங்லா, பங்கோன் மற்றும் அசுகஞ்ச் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்