தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தோடு ஒத்திசையும் வகையில் அவரின் நினைவாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட “MGR 100” எனும் புதிய நெல் ரகத்தை தமிழக முதல்வர் தஞ்சாவூரில் வெளியிட்டார்.
CO(R)50 மற்றும் BPT 5204 எனும் இரு இரகங்களின் கலப்பினால் (Crossing) உருவாக்கப்பட்ட CO-52 எனும் நெற் இரகமே MGR 100 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இரகமானது அதிக உற்பத்தியை தரவல்லது. சிறந்த தானிய தரத்தையும், நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறனும் கொண்டது.
CO-52 இரகமானது MGR 100 என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தாலும் மத்திய விதைகள் துணைக் குழுவின் இரக வெளியீடுகள் மற்றும் அறிவிப்பிற்கான அரசிதழில் வெளியிட TNAU எதிர்நோக்கி வருகின்றது.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது (TNAU – Tamil Nadu Agriculture University) MGR (COR-H1) எனும் இந்தியாவின் முதல் கலப்பு (ஹைபிரிட்) நெல் இரகத்தை வெளியிட்டது.