TNPSC Thervupettagam

புதிய பணத்தாள்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினை

October 19 , 2017 2642 days 889 0
  • பாதுகாப்பு காரணங்களை மேற்கொள்காட்டி, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் “தூய்மை இந்தியா திட்டத்தின்” இலச்சினையை அச்சிடுவதற்கான முடிவைப் பற்றிய தகவல்களை பகிர மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
  • தகவல் உரிமைச்சட்டம் 2005,பிரிவு 8(1) (a)-ன் கீழ் பொதுப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளைத் தவிர வங்கிகளிலுள்ள பணத்தைப் பற்றிய வடிவம், பாதுகாப்பு அம்சங்கள், தயாரிப்பு பொருள் பற்றிய தகவல்கள் பகிர்வது விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் “Ek Kadam Swachhata ki Aur” (A Step towards Cleanliness / தூய்மையை நோக்கி ஓர் அடி) எனும் செய்தியும், தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினையும் அச்சிடுமாறு வழங்கப்பட்ட ஆணையின் நகல்களை தருமாறு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரப்பட்டது.
  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத்துறையிடம் (Department Of Economic Affairs) தகவல் கோரும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார விவகாரத்துறையானது நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பாதுகாப்பு ஆவணங்கள் போன்றவையோடு தொடர்புடைய கொள்கை வரையறுப்பும், ரூபாய் நோட்டு அச்சிடல், நாணயங்கள் செய்தல் போன்றவற்றோடும் தொடர்புடைய திட்டமிடல் ஒருங்கிணைப்புகளில் உள்ள சிக்கலை தீர்க்கும் அமைப்பாகும்.
  • பொருளாதார விவகாரத்துறை (DAE) இந்த விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ளது.
  • RBI சட்டம் 1934, பிரிவு 25 ன்படி வங்கி நோட்டுகளின் தன்மை, மாதிரி, வடிவமைப்புப் பொருட்கள் ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்ட பின் மத்திய அரசின் ஒப்புதலின்படி உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்