TNPSC Thervupettagam

புதிய பண வழங்கீட்டுத் தொகுப்பு நிறுவனங்களுக்கான ஒப்புதல்

February 15 , 2024 282 days 283 0
  • சோஹோ மற்றும் ஐஸ்பே மற்றும் டெசென்ட்ரோ ஆகிய நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியானது பண வழங்கீட்டுத் தொகுப்பு நிறுவன உரிமத்தினை வழங்கியுள்ளது.
  • முன்னதாக ஸ்ட்ரைப், சோமாட்டோ மற்றும் டாடா பே ஆகியவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஒப்புதலைப் பெற்றன.
  • ரேசர்ப்பே மற்றும் கேஷ்ஃப்ரீ போன்ற பெரிய நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் உரிமம் பெற்றன.
  • இதுவரை, மொத்தம் 8 நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பண வழங்கீட்டு தொகுப்பு நிறுவனங்கள் உரிமத்தைப் பெற்றுள்ளன.
  • இந்த உரிமம் ஆனது, நிறுவனங்கள் ஆனது இயங்கலை வணிகங்கள் மற்றும் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு பண வழங்கீட்டுச் சேவைகளை வழங்க அனுமதிக்கிறது.
  • இவை வணிகர்கள் சார்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்று, ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குப் பிறகு அவற்றை வணிகர்களுக்குப் பரிமாற்றுவதற்கு முன் அந்த கட்டணங்களைத் திரட்டி தொகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்