டைம்ஸ் இதழின் 2024 ஆம் ஆண்டு புதிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இடம் பெற்ற இந்தியப் பல்கலைக்கழகங்களுள் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் தனது முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது.
இந்தத் தரவரிசையானது உலகளவில் 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளுக்குள் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டின் தரவரிசையில் உலகம் முழுவதும் உள்ள 673 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் 81வது இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகம், பாட்னாவில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இந்தியப் பல்கலைக் கழகங்கள் தரவரிசையில் இரண்டு முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன.