TNPSC Thervupettagam

புதிய பல்முனையோட்ட மின்பகுளி மின்கலத் தொழில்நுட்பம்

May 19 , 2023 558 days 298 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, ‘நீர்மம் சாராதக் கரிம ஆக்சிஜனேற்ற-ஒடுக்கப் பல்முனையோட்ட ஒரு மின்பகுளி மின்கலத்தினை’ உருவாக்கி உள்ளது.
  • கரிம இரசாயனங்களின் ஒரு வகுப்பான ‘பைரிலியம் உப்புகளை’ பயன்படுத்தி புதிய வகை மின்பகுளிகளை  ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • பொருத்தமானக் கட்டமைப்பு மாற்றங்களுடன் அதனால் பெரும் ஆற்றலைச் சேமிக்க முடியும் வகையில் இந்த இரசாயனங்கள் உயர் மின்னழுத்தச் செயல்பாடுகள் நடைபெற வழி வகுக்கின்றன.
  • இந்த மின்பகுளிகள் அதிக மின்னோட்ட அடர்த்தி மற்றும் மின்னழுத்தத்தைக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வழக்கமான மின்னோட்ட மின்கலங்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலம், சல்பூரிக் அமிலம் மற்றும் கார உலோக ஹைட்ராக்சைடுகள் போன்ற நீர்மம் சார்ந்த மின் பகுளிகளைக் கொண்டுள்ளது.
  • மின்பகுளிகளில் உள்ள நீர், மின்னாற் பகுப்புக்கு உட்படுவதால், அது செயல்பாட்டு மின்னழுத்த வரம்பு மற்றும் ஆற்றல் அடர்த்தியைக் குறைக்கிறது.
  • இதில் நீர்மம் இருப்பதால் மின்கல கூறுகளின் மீது அரித்தல் ஏற்பட வழி வகுத்து, அதன் ஆயுட்காலம் மற்றும் செயல்திறனைக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்