TNPSC Thervupettagam

புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு

November 27 , 2017 2583 days 993 0
  • ஆந்திரா - ஒரிசா எல்லையில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மகேந்திரகிரி மலைப்பகுதியில் புதிய பல்லி (Gecko) இனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவை ஹெமிடாக்ட்டைலஸ் (Hemidactylus) பேரினத்தைச் சார்ந்தவை.
  • வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வடமஹேந்திரகிரி மலைப்பகுதியின் சில இடங்களிலும், கடலோர மலைப் பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இது இம்மலைத் தொடரில் கண்டறியப்பட்ட இரண்டாவது குறிப்பிட்ட நிலம் சார் வகை பல்லியாகும் (endemic) மற்றும் முதுகெலும்புடைய (vertebrate) மூன்றாவது பல்லி இனமாகும்.
  • இதற்கு முன் முதல் நிலம் சார் தோற்றமுடைய “House Lizard” எனும் பெயருடைய பல்லி சத்திஸ்கர் மாநிலத்திலுள்ள கங்கர் காட்டி தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இவை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெமிடாக்ட்டைலஸ் பேரினத்தின் 32 வது இனமாகும்.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பல்லி இனத்திற்கு ஹெமிடாக்டைலஸ் சுஷில்  டுட்டாய் அல்லது டுட்டாவின் மஹேந்திரகிரி பல்லி என ஒரிசாவின் புகழ்பெற்ற ஊர்வன மற்றும் நீர்நில வாழ் விலங்கின ஆராய்ச்சியாளரான (Herpetologist) சுஷில் குமார் டுட்டாவை கவுரவிக்கும் வகையில் அவர் பெயர்கொண்டு இப்பல்லிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • Herpetology என்பது ஊர்வன உயிரிகள் மற்றும் நிலநீர் வாழ் உயிரிகளைப் பற்றி படிக்கும் விலங்கியலின் ஓர் பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்