மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்குப் பிறகு, தமிழகத்தில் மேலும் நான்கு இடங்கள் இந்த ஆண்டு பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்படலாம்.
தற்போது, காசம்பட்டி (திண்டுக்கல்), செந்திரக்கிளை புனித தோட்டங்கள் (கடலூர்), இடையப்பட்டி (மதுரை) மற்றும் குரியனப்பள்ளி வனத் தொகுதி (கிருஷ்ணகிரி) ஆகியவற்றை பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளங்களாக (BHS) அங்கீகரித்து அறிவிக்கும் முன்மொழிதலை மாநில அரசு முன் வைத்துள்ளது.
அரிட்டாப்பட்டி பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளம் (மதுரை மாவட்டம்) ஆனது, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் முதல் பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.