TNPSC Thervupettagam
June 5 , 2023 541 days 310 0
  • இதுநாள் வரை அறியப்பட்ட அதிக அடர்த்தி கொண்ட மற்றும் வியாழனை விட 13 மடங்கு நிறை கொண்ட புதிய வியாழன் கோள் அளவிலான புறக்கோள் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
  • இஸ்ரோவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபு - PRL மேம்பட்ட ஆரத் திசைவேக வானியல் ஆராய்ச்சி அலைமானியை (PARAS) பயன்படுத்தி இந்த மிகப்பெரிய புறக்கோளின் கண்டுபிடிப்பானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள் ஆனது, TOI4603 அல்லது HD 245134 எனப்படும் நட்சத்திரத்தைச் சுற்றிக் காணப்படுகிறது.
  • இது 731 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது TOI4603 என்ற துணை இராட்சத F-வகை நட்சத்திரத்தினை 7.24 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது புறக் கோள் கண்டுபிடிப்பினைக் குறிக்கிறது
  • மற்ற 2 கண்டுபிடிப்புகள் 2018 (K2-236b) மற்றும் 2021 (TOI-1789b) ஆகிய ஆண்டுகளில் மேற் கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்