TNPSC Thervupettagam

புதிய புவிசார் குறியீடுகளுக்கான விண்ணப்பங்கள் - 2024

October 17 , 2024 37 days 171 0
  • தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx) ஆனது பின்வரும் மூன்று உணவுப் பொருட்களுக்கு புவி சார் குறியீட்டினைப் பெறுவதற்கான விண்ணப்பத்தினை தாக்கல் செய்துள்ளது.
    • இராமநாதபுரம் பனங்கற்கண்டு,
    • கோவில்பட்டி சீவல், மற்றும்
    • இராமநாதபுரம் பட்டறை கருவாடு.
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) மதுரை வேளாண் காப்பு மன்றம் (MABIF) ஆனது இதற்கு ஆதரவு தெரிவித்தது.
  • இராமநாதபுரம் பனங்கற்கண்டு (படிக வடிவ பனை சர்க்கரை) ஆனது இப்பகுதியில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பட்டறை கருவாடு (உலர்ந்த மீன்) என்பது ஒரு பாரம்பரிய உலர் மீன் தயாரிப்பு முறையாகும் என்பதோடு இது மீன்களில் மஞ்சள் தூள் தடவி சேற்றில் புதைத்து உலர வைக்கும் செயல்முறையினை உள்ளடக்கியது.
  • கோவில்பட்டி சீவல் ஆனது அதன் மிருதுவான அமைப்பு மற்றும் மிகத் தனித்துவமான சுவைக்காக நன்கு அறியப்பட்ட ஒரு பாரம்பரிய நன்கு வறுத்த சிற்றுண்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்