TNPSC Thervupettagam

புதிய புவிசார் குறியீடுகள்

March 5 , 2024 296 days 580 0
  • ஓடிசாவின் புகழ்பெற்ற கட்டாக் ரூபா தாரகாசிக்கு (வெள்ளிக் கசவுப் பூவேலைப் பாடுகள்) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • கசவுப் பூவேலைப்பாடுகள் ஆனது பாரம்பரியமாக சிறந்த கைவினைத் திறன் மற்றும் பாரம்பரிய நகைகளில் செழிப்பு மிக்க வடிவமைப்புகளைக் கொண்டது.
  • தொல்லியல் சான்றுகள் ஆனது, மெசபடோமியாவில் கி.மு. 3500 ஆம் ஆண்டில் இந்த வேலைப்பாடுகள் நகைகளில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறுகின்றன.
  • வங்காளத்தின் பிரபலமான பாரம்பரியக் கைத்தறி துணியான பங்களார் மஸ்லின், ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் கொக்கிப்பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட சரிகைத் தயாரிப்புகள் மற்றும் குஜராத்தின் கட்ச் ரோகன் கைவினைப் பொருள்கள் ஆகியவற்றிற்கும் புவிசார் வழங்கப்பட்டுள்ளது.
  • பங்களார் (வங்காள) மஸ்லின் ரகத் துணியானது, வங்காளத்தின் பிரபலமான பாரம்பரியக் கைத்தறி கைவினைப் பொருட்ககளில் ஒன்றாகும்.
  • இந்த சிறந்த வகை மஸ்லின் என்பது பருத்தியால் ஆனது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரிப் பகுதியில் உள்ள கொக்கிப் பின்னல் வேலைப் பாடுகள் கொண்ட சரிகைத் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற நர்சாபூர், அதன் நுணுக்கமான கைவினைத் திறனுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் உள்ள ரியாவான் கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்ட ரத்லம் ரியாவான் லஹ்சுன் (பூண்டு) வகை மற்றும் குஜராத்தின் அம்பாஜி சலவைக் கல் (பளிங்கு) ஆகியவையும் புவிசார் குறியீட்டினைப் பெற்று உள்ளன.
  • கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக பூமியின் கண்ட மேலோட்டின் கீழ் உள்ள சுண்ணாம்புக் கல் மீண்டும் படிகமாக்கப் படும் போது இந்தப் பளிங்குக் கல் உருவாகிறது.
  • திரிபுரா ரிசா ஜவுளி வகைகள், ஹைதராபாத் லாக் (அரக்கு) வளையல்கள், அசாமின் மஜூலி முகமூடி மற்றும் அசாம் மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியம் ஆகியவை புவிசார் குறியீட்டினைப் பெற்ற மற்றத் தயாரிப்புகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்