TNPSC Thervupettagam

புதிய புவிசார் குறியீடு

March 3 , 2023 636 days 393 0
  • வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.
  • வேலூர் முள்ளு கத்தரிக்காய் ஆனது தமிழில் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப் படுகிறது.
  • வேலூர் முள்ளு கத்தரிக்காயில் 100 கிராமிற்கு 10.5 மி.கி. புரதம் என்ற நிலையில் 2 சதவீதம் புரதம் உள்ளது.
  • ஒரு வேலூர் முள்ளு கத்தரிக்காயானது, சராசரியாக 40 கிராம் எடை கொண்டதோடு, அறை வெப்பநிலையில் மூன்று நாட்களும், குளிர்சாதன வசதியில் ஒரு வாரம் வரையிலும் அது கெடாமல் இருக்கும்.
  • குண்டு (முண்டு) மிளகாய் என்பது உணவுப் பொருட்களில் வண்ணமளிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்ற மற்றும் தென்னிந்திய உணவுகளில் பெருமளவில் பயன் படுத்தப் படுகிற ஒரு வட்ட வடிவ மிளகாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்