TNPSC Thervupettagam

புதிய மராட்டியர் இட ஒதுக்கீடு மசோதா

February 25 , 2024 306 days 303 0
  • மராட்டியச் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மராட்டியர் இடஒதுக்கீட்டு மசோதாவினை மகாராஷ்டிரச் சட்ட சபை நிறைவேற்றியுள்ளது.
  • கடந்தப் பத்தாண்டுகளில் மராட்டியர் இட ஒதுக்கீட்டு மசோதாவானது மூன்றாவது முறையாக அந்த மாநில அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அதன் முந்தைய மசோதாவானது, 2021 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட்டது.
  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆனது, மராட்டியர் இடஒதுக்கீடு வழங்குவதற்காக, 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பினை மீறுவதற்கான சரியான காரணங்கள் இல்லாததை எடுத்துரைத்தது.
  • மகாராஷ்டிர மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (MSBCC) மாநில அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த இட  ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் மக்கள்தொகையில் 28% பேர் மராட்டியர்கள் என்றும், அவர்கள் பின்தங்கிய நிலையில் "பொது நிலை கடந்தச் சூழ்நிலைகள் மற்றும் அசாதாரண நிலையில்" இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறியது.
  • 50% இட ஒதுக்கீட்டு வரம்பை மீறும் ஒரு முயற்சியை நியாயப்படுத்தும் வகையில், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து இந்த மசோதா எடுத்து உரைத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலம் தவிர்த்து, ஹரியானாவில் 67%, பீகாரில் 69%, மேற்கு வங்கத்தில் 55%, குஜராத்தில் 59% இட ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்