புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை (NDCT) விதிகள், 2019
October 24 , 2024 32 days 87 0
2019 ஆம் ஆண்டு புதிய மருந்துகள் மற்றும் மருத்துவச் சோதனை (NDCT) விதிகளில் புதிய மருந்துகளின் வரையறையில் அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் சேர்க்க மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (DTAB) பரிந்துரைத்துள்ளது.
தற்போது உலகளவில் பொது சுகாதார அச்சுறுத்தலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள வளர்ந்து வரும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் எதிர்ப்புத் திறனை மிகவும் நன்கு கட்டுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1945 ஆம் ஆண்டு மருந்து விதிகளின் கீழான முத்திரையிடல் நிபந்தனைகளை திருத்தி அமைப்பது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தயாரிப்புகளுக்கு நீல நிறப் பட்டை அல்லது குறியீட்டினை வழங்குவதும் குறித்து வாரியம் கருத்தில் கொண்டுள்ளது.
தேவையான உரிமம் பெறாத மருந்து உற்பத்தி சாராத தொழிற்சாலைகளுக்கு எந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் வர்த்தகர்கள் விற்கக் கூடாது என்று பரிந்து உரைக்கப் பட்டுள்ளது.
DTAB என்பது நாட்டில் மருந்துகள் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் உயர்மட்டச் சட்டப்பூர்வ அமைப்பாகும்.