குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு முன்கூட்டியே சுற்றுப்புறத்தில் பரவி காணப்படுகின்ற நுண் மாசு பொருட்களின் (particulate matter -PM) எதிர்ப்பார்க்கபடும் அளவினை அறிய உதவும் மாசு முன்னறிவிப்பு அமைப்பினை (pollution-forecast system) உருவாக்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பின்லாந்துடன் கூட்டிணைந்துள்ளது.
இந்த செயல்முறையை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences - MoES) ஒருங்கிணைக்க உள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (National Oceanic and Atmospheric Administration - NOAA) மற்றும் பின்னிஸ் வானியல் நிறுவனத்தின் (Finnish Meteorological Institute) நிபுணத்துவத்துடன் கூட்டிணைந்து இந்த அமைப்பு உருவாக்கப்படும்.
தற்போது நடப்பில் காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பானது (System of Air Quality and Weather Forecasting and Research -SAFAR) புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல நிறுவனத்தால் (Indian Institute of Tropical Meteorology) நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனமானது டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் காணப்படும் மாசுபாட்டுப் போக்கினை (pollution trends) தெரிவிக்கின்ற முதன்மை முன்னறிவிப்பு (apex forecaster) அமைப்பாகும்.
இந்தியாவில் காற்றுத் தர கண்காணிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய தூய காற்றுத் திட்டத்தின் (National Clean Air Programme-NCAP) வரைவை மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.