TNPSC Thervupettagam

புதிய மாநகராட்சிகள் 2024

March 18 , 2024 251 days 10871 0
  • புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
  • இந்த நான்கு மாநகராட்சிகளுடன் தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
  • புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 அண்டை கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து புதுக்கோட்டை மாநகராட்சியாக  உருவாக்கப்பட்டுள்ளது.
  • திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 அண்டை கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து புதிய திருவண்ணாமலை மாநகராட்சியாக  உருவாக்கப்பட்டுள்ளது.
  • நாமக்கல் நகராட்சி மற்றும் 12 அண்டை கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து புதிய நாமக்கல் மாநகராட்சியாக  உருவாக்கப்பட்டுள்ளது.
  • காரைக்குடி நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள் மற்றும் ஐந்து கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து காரைக்குடி மாநகராட்சியாக  உருவாக்கப்பட்டுள்ளது.
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்தப் புதிய மாநகராட்சிகள் நிறுவப் பட்டு உள்ளன.
  • இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்., என்பதோடு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் நகர்ப்புற மக்கள் தொகை 48.45% ஆக உள்ளது.
  • தற்போது இம்மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகை 53% ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்