2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டின் முறைசார் பணித் துறையில் புதிதாக சுமார் 1.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்ததை விட 26 சதவீதமும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 13 சதவீதமும் அதிகமாகும்.
புதிதாக சேர்க்கப்பட்ட இந்த வேலைவாய்ப்புகள் ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட புதிய நிகரச்சேர்க்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அளவிடப் படுகிறது.