தமிழகத்தில் நான்கு தளங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது மாநிலத்தின் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி உள்ளது.
மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது புதிதாக 11 இந்தியத் தளங்களை ராம்சார் பட்டியலில் சேர்த்தது.
எனவே, தற்போது நாட்டில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் எண்ணிக்கை 75 ஆகும்.
தமிழ்நாட்டின் 4 புதிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள்
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம் மாவட்டம்
காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம் மாவட்டம்
வடுவூர் பறவைகள் சரணாலயம் - திருவாரூர் மாவட்டம் மற்றும்
சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம்- கன்னியாகுமரி மாவட்டம்
மற்ற தளங்களுள் ஒடிசாவில் உள்ள மூன்று தளங்கள், ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டு தளங்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு தளங்கள் ஆகியவை அடங்கும்.
தற்போது நாட்டிலேயே அதிகபட்ச ராம்சார் தளங்கள் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள (14) நிலையில், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10) மாநிலம் இடம் பெற்றுள்ளது.
1982 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மொத்தம் 26 தளங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு முதல், 49 தளங்கள் இந்த முக்கிய அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன.