1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் உள்ள பொருள் விளங்காத சொற்களைக் குறைத்து அவற்றை நன்கு புரிந்து கொள்வதை எளிதாக்கும் வகையில் நிதியமைச்சர் புதிய வருமான வரி மசோதாவினைத் தாக்கல் செய்துள்ளார்.
தற்போதைய சட்டம் ஆனது சுமார் 800க்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஆனால முன்மொழியப்பட்ட சட்டம் 536 பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது.
புதிய வரி முறை ஆனது மக்கள் பின்பற்றவும் செயல்படுத்தவும் மிகவும் எளிதான வகையிலான 'S.I.M.P.L.E' என சுருக்கி கூறப்படும் ஐந்து முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து கொள்கைகளும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன: "நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி, ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான, குறைக்கப்பட்ட வழக்காடல் முறை, நடைமுறை சார்ந்தது மற்றும் வெளிப்படையானது, கற்றல் மற்றும் மாற்றியமைத்தல், மற்றும் செயல் திறம் மிக்க வரி சீர்திருத்தங்கள்".
இதற்கு முந்தைய வருமான வரிச் சட்டத்தில் உள்ள 47 அத்தியாயங்களில் பாதிக்கும் குறைவான 23 அத்தியாயங்களே இந்த மசோதாவில் உள்ளன.
சட்டத்தில் உள்ளதை விட இரண்டு அதிகமாக இதில் 16 அட்டவணைகள் உள்ளன.
இந்த மசோதா ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தொடங்கி 12 மாத காலமாக வரையறுக்கப் பட்டுள்ள "வரி ஆண்டு" என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறது.
இணைய சங்கேதப் பணம் போன்ற மெய்நிகர் எண்ணிமச் சொத்துக்கள் இனிமேல் மதிப்பீட்டாளரின் மூலதன சொத்தாகக் கணக்கிடப்படும் சொத்தின் வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாவானது பாராளுமன்றத்தின் கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற நிலையில் அக்குழுவானது புதிய வரி திட்டங்களை ஆராய்ந்து தேவைப்பட்டால் அதில் மாற்றங்களைச் செய்யும்.
இந்தப் புதிய சட்டம் ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.