மர்க்கோன் ட்ரோய்ஜோ என்பவர் புதிய வளர்ச்சி வங்கியின் (NDB - New Development Bank) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இவர் பிரேசிலின் முன்னாள் துணைப் பொருளாதார அமைச்சர் ஆவார். இந்தப் பன்னாட்டு நிதியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த K.V. காமத் என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அனில் கிஷோரா என்பவர் இந்த வங்கியின் துணைத் தலைவர் மற்றும் தலைமை இடர்பாட்டு அதிகாரி ஆவார்.
இந்தியாவைச் சேர்ந்த K.V. காமத் என்பவர் NDBயின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார்.
மேலும் இது பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி என்றும் அழைக்கப் படுகின்றது.
இதன் தலைமையகம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.
NDBயின் முதலாவது பிராந்திய அலுவலகம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க்கில் அமைந்துள்ளது.
இது 2014 ஆம் ஆண்டில் பிரிக்ஸின் போர்த்தலீசா பிரகடனத்தின் மூலம் அமைக்கப் பட்டதாகும்.