TNPSC Thervupettagam

புதிய வழிநடத்தப்படும் ஏவுகணை அழிப்பான்கள்

May 20 , 2019 1922 days 564 0
  • சீனாவின் கடற்படையானது தாலியானில் “சீனாவின் கேடயம்” என்றழைக்கப்படும் இரண்டு புதிய 052D வகை லூயாங் III வகுப்பு வழிநடத்தப்படும் ஏவுகணை அழிப்பான்களை செயல்நிலைப் படுத்தியுள்ளது.
  • தாங்ஷான் மற்றும் சுஷோய் எனும் பெயரிடப்பட்ட இவ்விரு கப்பல்களும் இந்த வகுப்பின் முறையே 19வது மற்றும் 20வது கப்பல்களாகும்.
  • சீனா தற்போது செயல்பாட்டிலோ அல்லது விரைவில் சேவைக்கு வரும் நிலையிலோ 20 வகையான 052D கப்பல்களைக் கொண்டு இருக்கின்றது.
  • இந்த அழிப்பான்களானது வேகமானதாகும். போர்க் கப்பல்களானது நீண்ட தூரத்திற்கு இயக்கக் கூடியதாகும். மேலும் இவற்றை விமானந் தாங்கியுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
  • சீனாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக சீனாவின் கடற்படையானது தனது கடற்படைத் தளவாட மையத்தை இந்தியப் பெருங்கடலில் உள்ள டிஜிபோட்டி எனும் தீவில் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்