TNPSC Thervupettagam

புதிய விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

May 7 , 2019 1935 days 674 0
  • ஒரு புதிய சிறப்பு வாய்ந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலை கட்டமைப்பதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
  • இது ஐஎன்எஸ் விஷால் என்று பெயரிடப்பட்டு 2022இல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட விருக்கின்றது.
  • இத்திட்டம் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • 65,000 டன்கள் எடை கொண்ட எலிசபெத் ராணி (HMS Queen Elizabeth) என்ற போர்க் கப்பலைப் போன்றே இக்கப்பலைக் கட்டமைக்க திட்டமிடப் பட்டிருக்கின்றது.
  • HMS Queen Elizabeth என்பது 60 போர் விமானங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட பிரிட்டனின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலாகும்.
  • இதற்கு முன்பு, 1987 ஆம் ஆண்டில் பிரிட்டன் HMC ஹெர்மீஸ் என்ற கப்பலை இந்தியாவிற்கு விற்பனை செய்தது.
  • இது INS விராத் என்று பெயரிடப்பட்டு 2017 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்