TNPSC Thervupettagam

புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு 2020

August 31 , 2021 1056 days 572 0
  • அனிமல் டிஸ்கவரிஸ் 2020 (புதிய விலங்குகள் கண்டுபிடிப்பு 2020) என்பது இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆவணமாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் விலங்குகள் பட்டியலில் 557 புதிய இனங்கள் சேர்க்கப் பட்டுள்ளதை இது தெளிவுபடுத்துகிறது.
  • இதில் 407 புதிய இனங்களும் 150 புதிய பதிவுகளும் அடங்கும்.
  • தற்போது இந்தியாவிலுள்ள விலங்கினங்களின் எண்ணிக்கை 1,02,718 இனங்களாக உயர்ந்துள்ளது.

சேர்க்கப்பட்ட சில இனங்கள்

  • டிரிமெரசரஸ் சலாசர் (Trimeresurus salazar) எனும் புதிய புல்விரியன் பாம்பு இனமானது அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது.
  • லைகோடன் டெக்கனென்சிஸ் (Lycodon deccanensis) எனும் தக்காண வெள்ளிக் கோல் வரையன் பாம்பினமானது கர்நாடகாவில் கண்டறியப்பட்டது.
  • ஸ்பெரோடெகா பெங்களூரு (Sphaerotheca Bengaluru) எனப்படும் பொந்து அமைக்கும் தவளையினத்திற்குப் பெங்களூரு நகரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • சைரியாஸ் அஞ்சலை (Xyrias anjaalai) எனப்படும் புதிய ஆழ்கடல் விலாங்கு மீன் இனமானது கேரளாவில் கண்டறியப்பட்டது.
  • கிளைபோதோரக்ஸ் கியூடிகையென்சிஸ் (Glyptothorax giudikyensis) எனும் ஒரு புதிய கெளுத்தி மீன் இனமானது மணிப்பூரில் கண்டறியப்பட்டது.
  • க்ளைஸ்டர் காலேடான்சிஸ் (Clyster galateansis) எனும் புதிய வண்டினமானது நிகோபர் உயிர்க் கோளப் பகுதியில் கண்டறியப்பட்டது.
  • மியோட்டிஸ் கப் ஃப்ரேட்டர் (Myotis cf. frater) எனும் ஒரு புதிய வௌவால் இனமானது முதன்முறையாக உத்தரகாண்டில் தென்பட்டுள்ளது.
  • சூதெரா சிட்ரினா கிப்சோன்ஹில்லி (Zoothera citrina gibsonhilli) எனும் ஒரு செந்தலை பூங்குருவி இனமானது அந்தமான் & நிகோபர் தீவுகளிலுள்ள நார்கொண்டம் தீவில் முதன்முறையாக தென்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்