வெட்லேண்ட் வைரஸ் (WELV) என அழைக்கப்படுகின்ற ஒரு புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப் பட்டுள்ளது.
இது உண்ணி எனப்படும் பூச்சிக் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவி, சில சமயங்களில் நரம்பியல் பாதிப்பு நோயை உண்டாக்கும்.
இது 2019 ஆம் ஆண்டில் மங்கோலியாவில் உள்ள ஒரு பெரிய ஈரநிலத்தில் உள்ள பூங்காவிற்குச் சென்ற சென்று வந்த ஒரு மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹீமாபிசலிஸ் கன்சின்னா இனத்தில் உள்ள உண்ணிகள் இந்த வைரஸை சுமக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளன.
உண்ணி மூலம் பரவும் நோய்கள் பரவலாக அதிகளவில் உள்ளன என்ற நிலையில் ஆல்பா-கேல் சிண்ட்ரோம் (AGS), லைம் நோய், அனபிளாஸ்மோசிஸ், எர்லிச்சியோசிஸ், உண்ணிக்காய்ச்சல், போவாசான் (POW), ராக்கி மௌண்டெய்ன் புள்ளிக் காய்ச்சல், மற்றும் டூலரீமியா போன்ற பொதுவான நோய்கள் உண்ணி மூலம் பரவுகின்றன.
அமெரிக்காவில் பரவலாக உண்ணிகள் மூலம் பரவும் நோய் லைம் நோயாகும்.