இந்தியாவின் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுவானது (Appointments Committee of Cabinet - ACC), அமெரிக்காவில் தற்போது இந்தியாவிற்கான தூதராகப் பணியாற்றி வரும் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை அடுத்த வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
எச்.வி.ஷ்ரிங்லா அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு வெளியுறவுத் துறை செயலாளராகப் பணியாற்ற இருகின்றார். தற்போதைய வெளியுறவுத் துறை செயலாளரான விஜய் கோகலேவிற்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.