TNPSC Thervupettagam

புதிய வேதிக் குறிப்புப் பொருள்

April 7 , 2022 872 days 419 0
  • தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தினால், உள்நாட்டிலேயே 6 புதிய மற்றும் அரிதான குறிப்புப் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இது ஊக்க மருந்துப் பகுப்பாய்விற்காக உலகம் முழுவதும் செயல்படுகின்ற உலக ஊக்க மருந்து எதிர்ப்பு முகமையின் அங்கீகாரம் பெற்ற அனைத்து ஆய்வகங்களிலும் தேவைப் படுகின்ற தூய வடிவிலான ஒரு வேதிப் பொருளாகும்.
  • இந்த 6 வேதிக் குறிப்புப் பொருட்களையும், ஜம்முவிலுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் – ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி நிறுவனம் மற்றும் கௌகாத்தியிலுள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துத் தேசிய ஊக்க மருந்துப் பரிசோதனை ஆய்வகம் உள்நாட்டிலேயே தயாரித்தது.
  • தேசிய ஊக்க மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தின் ஆளுகை அமைப்பின் 15வது அமர்வின் போது மத்திய இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் இவற்றை வெளியிட்டார்.
  • இந்தியா இன்று வரையில், வேதிக் குறிப்புப் பொருட்களை ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்